பிரபல நடிகை 'பதினாறு வயதினிலே'  ஶ்ரீதேவி மாரடைப்பினால் காலமானார்

India
Typography

துபாய், பிப்.25- தமிழ், தெலுங்கு, மலையாளம்  மற்றும் இந்தி எனத் திரையுலகில் கோடிக்கணக்கான ரசிகர்களைப் பெற்றிருந்த பிரபல நடிகையான 'பதினாறு வயதினிலே' ஶ்ரீதேவி மாரடைப்பினால் நேற்று காலமானார். 54 வயதுடைய ஶ்ரீதேவியின் மரணம் குறித்த துயரச் செய்தியை அவரது மைத்துனர் சஞ்சாய் கபூர் அறிவித்தார்.

தங்களுக்கு வேண்டிய ஒருவரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஶ்ரீ தேவி, அவருடைய கணவர் போனி கபூர் மகள் குஷி ஆகியோருடன்  துபாய்க்கு வந்திருந்தார். திடிரென ஏற்பட்ட மாரடைப்பினால் அவர் உயிர்நீத்தார் என்று சஞ்சாய் கூறினார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS