அம்மா கனவை நிறைவேற்ற நடிப்புக்கு திரும்பிய ஶ்ரீதேவியின் மகள் ஜான்வி!

India
Typography

 மும்பை, மார்ச்.9-  அம்மா இல்லாத கவலையை ஓரங்கட்டிவிட்டு, அம்மாவின் கனவை நிறைவேற்றுவதற்காக மறைந்த  நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி  மீண்டும் படப்பிடிப்புக்கு கிளம்பி விட்டதாக  தகவல் வெளியாகியுள்ளன.

ஸ்ரீதேவி தனது மகள் ஜான்வியை நடிகையாக்கிப் பார்க்க விரும்பினார். ஜான்வி குழந்தையாக இருந்தபோது படத்தில் டாக்டராக நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார். அதை கேட்ட ஸ்ரீதேவி மகளுக்கு நடிப்பில் ஆர்வம் இருப்பதை புரிந்து கொண்டு ஊக்கு வித்தார்.

ஜான்வி ஹீரோயினாக அறிமுகமாகும் படம் 'தடக்'. அந்தப் படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோது தான் ஸ்ரீதேவி இறந்த செய்தி ஜான்விக்கு தெரிவிக்கப்பட்டது.

அம்மா இறந்து இரண்டு வாரங்கள் கூட ஆகாத நிலையில்,  சோகத்தில் இருந்து மீண்டு  ஜான்வி மறுபடியும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். என்ன தான் கவலை இருந்தாலும் தைரியமாக நடிக்க வந்த ஜான்வியை பாலிவுட்காரர்கள் பாராட்டியுள்ளனர்.

பாலிவுட்டில் பெரிய ஆளாகி தனது அம்மாவை பெருமை அடையச் செய்ய வேண்டும் என்பதே ஜான்வியின் ஆசை. அதனால் தான் அதற்கான வேலையில் இறங்கிவிட்டார்.

'தடக்' படம் வரும் ஜூலை மாதம் 6 ஆம் தேதி வெளியாக  உள்ளது. மகளை பெரிய திரையில் பார்க்க ஆசைப்பட்ட ஸ்ரீதேவி 'தடக்'  திரைக்கு வருவதை காணும் முன்பே இறந்துவிட்டார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS