12 வயதுக்கு கீழான சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு… ராஜஸ்தனில் புதிய சட்டம் !

India
Typography
ஜெய்ப்பூர் மார்ச்.10-  12 வயதுக்கு கீழான சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு என்று ராஜஸ்தானில் புதிய சட்டம் அமலாகி இருக்கிறது.
12 வயதுக்கு கீழான சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு தண்டனை வழங்கப்படும் என்று நேற்று ராஜஸ்தான் சட்டமன்றத்தில் அமலுக்கு கொண்டு வரப்பட்டது. 
இந்த சட்டம் கடந்த டிசம்பர் மாதம் மத்திய பிரதேசத்தில் அமலுக்கு வந்தது. இன்னும் சில நாட்களில் ஹரியானாவில் அமலாக இருக்கிறது.
அதேபோல் கர்நாடக, மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களும் இந்த சட்டத்தை அமல்படுத்தும் முனைப்பில் இருக்கிறது. இந்த சட்டம் குழுவாக பாலியல் வன்புணர்வின் ஈடுபடுபவர்களுக்கும் பொருந்தும்.
குழுவாக 12 வயதுக்கு கீழான சிறுமிகளை பலாத்காரம் செய்தால், அனைவருக்கும் தண்டனை வழங்கப்படும் என்று இந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இதற்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
 
BLOG COMMENTS POWERED BY DISQUS