'ராஜிவ் கொலையாளிகளை மன்னித்து விட்டேன்!' -ராகுல் காந்தி கருத்தை வரவேற்ற அற்புதம்மாள்

India
Typography

சிங்கப்பூர், மார்ச். 11- தம்முடைய தந்தை ராஜிவ் காந்தியின் கொலையில் சம்பந்தப்பட்டவர்களை  தாம் மன்னித்து விட்டதாக  சிங்கப்பூரில் ஓர் ஆய்வரங்கில்  ராகுல் காந்தி  கூறியிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்று சிறைவாசம் அனுபவித்து வரும் முருகன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரின்  குடும்பத்தினர் கூறினர்.

இது தொடர்பாக பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். சிங்கப்பூர் ஆய்வரங்கில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின்  படுகொலை குறித்து ராகுல்காந்தி கருத்துரைத்தார்.  

"ராஜிவ் காந்தியின் கொலையாளிகளை முழுமையாக மன்னித்து விட்டோம். பிரபாகரனுக்காகவும் அவருடைய பிள்ளைகளுக்காகவும் நான் வருத்தப்பட்டுள்ளேன்" என்று அவர் சொன்னார்.

"நானும் என் சகோதரி பிரியங்காவும் எப்போதோ அவர்களை மன்னித்து விட்டோம். தொடக்கத்தில் எங்களுக்கு அவர்கள் மீது கோபம் இருந்தது.  ஆனால் இப்போது அப்படிப்பட்ட கோபம் எதுவும் இல்லை" என்று ராகுல் குறிப்பிட்டார்.

ராகுல் இவ்வாறு கூறியிருப்பது தனக்கு மகிழ்ச்சி அளித்திருப்பதாக பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கூறியிருக்கிறார். சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு  அவர்களை மன்னித்துவிட்டதாக ராகுல் கூறியது ஒரு மகிழ்ச்சியான செய்தி என்று அவர் தெரிவித்தார்.

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS