வெடித்துச் சிதறிய கைத்தொலைபேசி பரிதாபமாக மாண்டார்  இளம்பெண்! 

India
Typography

புவனேஷ்வர், மார்ச். 20-  இந்தியாவில் கைத்தொலைபேசி  வெடித்துச் சிதறியதால் இளம் பெண் ஒருவர் பரிதாபமாக இறந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓரிசா மாநிலம் கெரியாங்கனி கிராமத்தைச் சேர்ந்தவர் உமா ஒராம் என்ற இளம் பெண். இவர் அண்மையில் தன் உறவினர்களிடம் கைத்தொலை பேசியில்  பேசிக்கொண்டிருந்தார். அப்போது கைத்தொலைபேசியில்  'சார்ஜ்' குறைந்ததன் காரணமாக, உடனடியாக சார்ஜ் போட்ட நிலையிலேயே கைத்தொலைபேசியில் பேசியுள்ளார். இதனால், போன் திடீரென்று வெப்பம் அதிகரித்து  அது வெடித்துச் சிதறியுள்ளது.

இதை அறிந்த குடும்பத்தினர் அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். கைகள் மற்றும் உடலின் சில பாகங்களில் காயங்களோடு அனுமதித்த நிலையில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இது குறித்து அந்த பெண்ணின் சகோதரர் கூறுகையில், 'எங்கள் வீட்டு உறவினர்களிடம் அவள் 'சார்ஜரில்' ' போட்ட நிலையில் பேசிக் கொண்டிருந்தாள்.

திடீரென்று அது வெடித்ததால், அவள் சுயநினைவற்று மயங்கினாள். உடனடியாக நாங்கள் மருத்துவமனையில் அனுமதித்த போதும் எந்த பயனும் இல்லை. அவல் பயன்படுத்தியது நோக்கியா கைத்தொலைபேசி' என்று அவர் சொன்னார்.

இது குறித்து நோக்கியா தொலைபேசி  நிறுவனத்தைச் சேர்ந்த  செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இந்த தகவலை கேட்டு நாங்கள் மிகவும் வருத்தமடைகிறோம் என்று கூறியுள்ளார். மேலும் இந்த சம்பவத்தின் உண்மை நிலை அறியவும் அதற்கு காரணம் தங்கள் நிறுவனத்தின் கைத்தொலைபேசிதான்  தான் என்றால் எதனால்   இது ஏற்பட்டது என்பது அறியப்படும் என்று கூறியுள்ளார். 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS