விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்கிற்கு இந்தியா சிறப்பு அஞ்சல் தலை!

India
Typography

மும்பை, மார்ச் 21- மறைந்த இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்கிற்கு இந்தியாவின் அஞ்சல் துறை சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட்டு அஞ்சலி செலுத்தியது.

இங்கிலாந்தைச் சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் கடந்த வாரம் மார்ச் 14 ஆம் தேதி மரணமடைந்தார். நரம்பியல் நோயால் உடலியக்கம் பாதிக்கப்பட்ட நிலையிலும், அவரின் விடாமுயற்சியின் மூலம் அனைவருக்கும் முன்னுதாரணமாக திகழ்ந்தார்.

இயற்பியலில் அவர் செய்த ஆராய்ச்சி அவருக்குப் பல விருதுகளைப் பெற்று தந்தது. அவர் 76 வயதில் தனது வீட்டில் இயற்கையான முறையில் இறந்தார். அவரது மறைவுக்கு உலகில் உள்ள பல்வேறு உலகத் தலைவர்கள் இரங்கல் செலுத்தினர்.

இந்நிலையில்,  மறைந்த  விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்கிற்கு அஞ்சல் தலை வெளியிட்டு இந்திய அஞ்சல் துறையும் அஞ்சலி செலுத்தியது.

இதுதொடர்பாக, அஞ்சல் துறை அதிகாரிகள் கூறுகையில், விஞ்ஞானி ஹாக்கிங்குக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், அவரது அஞ்சல் தலை 22 நகரங்களில் வெளியிடப்பட்டு உள்ளது எனத் தெரிவித்தனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS