நடிகர் பிரபாஸ்- நிஹாரிகா  திருமணமா?

India
Typography

ஹைதராபாத், ஏப்ரல்10-  'பாகுபலி' படத்தின் மூலம் இந்திய சினிமாவிலும் பிரபலமான தெலுங்கு  முன்னணி நாயகன் பிரபாஸுக்கும் நடிகை நிஹாரிகாவுக்கும் திருமண ஏறபாடுகள் நடந்து வருவதாக பரபரப்பான செய்தி ஒன்று வெளியானது.

பாகுபலி படத்திற்கு பின் பிரபாஸ் தற்போது சாஹோ என்ற படத்தில் நடித்து வருகிறார். பாகுபலியில் நடிக்கும் போது பிரபாஸூக்கும் அனுஷ்காவுக்கும் காதல் ஏற்பட்டதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும் தகவல் வெளியானது. 

அதனை இருவருமே மறுத்த நிலையில் அடிக்கடி கிசுகிசுக்கள் வந்த வண்ணமாகவே இருந்தன. இவர்கல் இருவரும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொண்டு வந்தது, இந்த ஆரூடத்தை வலுப்படுத்தியது.

இதனிடையே  'நல்ல நாள் பாத்து சொல்றேன்' பட நாயகி நிஹாரிகாவுக்கும்  பிரபாஸூக்கும் திருமணம் என்று பேச்சு அடிபடுகிறது.  நிஹாரிகா, நடிகர் சிரஞ்சீவியின் தம்பி நாகேந்திர பிரசாத்தின் மகள்.  இவர் சீரஞ்சிவி நடிக்கும் சைரா நரசிம்ம ரெட்டி படத்திலும் நடிக்கிறார். 

நிஹாரிகாவுக்கும் பிரபாஸூக்கும் விரைவில் நிச்சயதார்த்தம் நடக்க விருப்பதாக தெலுங்கு ஊடகங்கள் எழுதி வருகின்றன. இச்செய்தியைத் தொடர்ந்து சிரஞ்சிவி குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தற்போது தான் நல்ல படங்கள் கிடைத்து வளர்ந்து வருகிறார். நிஹாரிகா  திருமணம் குறித்து தாங்கள் பேச்சே எடுக்கவில்லை எனத் தெரிவித்தார் சீரஞ்சிவி. 

BLOG COMMENTS POWERED BY DISQUS