சிறுமி ஆசிபா பாலியல் படுகொலை: இந்தியா முழுவதும் அதிர்ச்சி அலை!

India
Typography

காஷ்மீர், ஏப்.13-  கத்துவா கிராமத்தில் எட்டு வயது சிறுமி ஆசிபாவுக்கு நேர்த்த கொடூரம் வார்த்தைகளில் விவரிக்க முடியாதது. அந்த பச்சிளம் குழந்தை 9 பாதகர்கள் கோயிலில் அடைத்து வைத்து தொடர்ந்து கற்பழித்து கொன்று குப்பையில் வீசியிருக்கிறார்கள். 

இதில் பாஜகவினருக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து நாடு தழுவிய அளவில் அரசியல் கட்சிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

சிறுமி ஆசிபாவுக்கு நேர்ந்த இந்த கொடுமை நாட்டையே உலுக்கியுள்ளது. அனைத்துலக அளவில் கண்டனங்கள் குவிகின்றன. இதனிடையே தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் இந்த பஞ்சமா பாதகத்தைக் கண்ணீருடன் கண்டித்துள்ளனர்.

"உங்கள் மகளாக இருந்திருந்தால்   இந்தக் கொடூரத்தைப் புரிந்து இருப்பீர்களா? ஆசிபா என் மகளும் கூட. ஒரு மனிதனாக- குடிமகனாக- தந்தையாக ஆசிபாவை காப்பாற்ற முடியாத கோபத்தை உணர்கிறேன். மன்னித்து விடு மகளே, நீ பத்திரமாக வாழத் தகுந்த நாடாக இதை இன்னும் மாற்றவில்லை. குறைந்த பட்சம் இனி வரும் உன் போன்ற குழந்தைகள் பத்திரமாக வாழவாவது நான் போராடுவேன் என்று கமல் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது? சட்டத்தில் திருத்தம் வருவதற்குள் எத்தனை அசிபாக்களை பலி கொடுக்கப் போகிறோமோ . ஒரு பெண்ணை பாதுகாப்பாக வாழ வைக்காத தேசம் என்ன தேசம் என்று தமன்னா வருந்தியுள்ளார். 

ஒரு தந்தையாக ஆசிபாவுக்கு நேர்ந்த கொடூரத்துக்காக என் மனம் வலியில் கதறுகிறது. ஒரு சமூகத்தில் இன்னும் எத்தனைக் கொடுமைகளை தாக்கிக் கொள்வது இந்தக் கொடுமைகளுக்கெல்லாம் முற்றுப் புள்ளி எப்போது என பிரகாஷ்ராஜ்  தனது வலியை ஆசிபாவுக்காக வெளிப்படுத்தி யுள்ளர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS