'சிறுமிகள் உள்பட பல நடிகைகளை  சீரழித்த தயாரிப்பாளர்! '- ஸ்ரீரெட்டி  

India
Typography

ஹைதராபாத், ஏப்.16- பிரபல தயாரிப்பாளர் ஒருவர் நூற்றுக்கணக்கான பெண்களை சினிமா ஆசைகாட்டி சீரழித்து இருப்பதாக நடிகை ஸ்ரீரெட்டி ஆவேசமாக அம்பலப்படுத்தி உள்ளார்.

தெலுங்கு திரையுலகில் படவாய்ப்புக்காக பெண்களை படுக்கைக்கு அழைக்கும் பிரபலங்களைப் பெயர்களை வெளியிட்டு வருகிறார் நடிகை ஸ்ரீரெட்டி. அவரிடம் சமாதானம் பேசி அவரை அமைதியாக இருக்க வைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தோல்வி அடைந்துள்ளன.

இந்நிலையில் புதுக் குண்டு ஒன்றை தூக்கிப் போட்டுள்ளார் ஸ்ரீரெட்டி.  இந்தப் பிரபலத் தயாரிப்பாளர் அப்பராவ்,  16 வயது சிறுமிகள் உள்பட நூற்றுக்கணக்கான பெண் கலைஞர்களை பாலியல் ரீதியாக பயன் படுத்தியுள்ளார் என்று டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் ஸ்ரீரெட்டி.

ராணாவின் தம்பி அபிராம் டகுபாட்டி,  எழுத்தாளர் கோனா வெங்கட், இயக்குனர் கொரடலா சிவா, நகைச்சுவை நடிகர் விவா ஹர்ஷா, பாடகர் ஸ்ரீராம் சந்திரா உள்ளிட்டோரின் பெயர்களை  ஸ்ரீலீக்ஸின் ஒரு பகுதியாக வெளியிட்டுள்ளார் ஸ்ரீரெட்டி.

நடிகை ஶ்ரீரெட்டி, தொலைக்காட்சி  நிகழ்ச்சியில் ஒன்றில் அப்பாரவ் பற்றி பேசினார். இதையடுத்து அப்பாராவுக்கு எதிராக பல பெண்கள் கலைஞர்கள் குரல் கொடுத்துள்ளனர். ஸ்ரேயா, ஸ்ரீவாணி, ஸ்ரீதேவி ஆகியோர் தொலைக்காட்சி நிறுவனங்களுடன்  தொடர்பு கொண்டு அப்பாராவ் தங்களிடம் தவறாக நடந்ததாக தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் சிறுமிகளும் அடங்குவர்.

தாம் தயாரிக்கும் படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி, அப்பராவ் தன்னை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியதாக  ஹேமா என்ற இளம் நடிகை கூறியுள்ளார். இதனிடையே, அதே தொலைக்காட்சி சேனலுடன் தொடர்பு கொண்ட  அப்பராவ், இந்தப் பெண்கள் அனைவரும் கூறியதில் உண்மை இல்லை என்று தெரிவித்துள்ளார். 

BLOG COMMENTS POWERED BY DISQUS