ஆபாசத் தளத்தில்  சிறுமி ஆஷிபாவின் காணொளியை தேடிய கேவலம் அம்பலம்!

India
Typography

புதுடில்லி, ஏப்ரல்.17- இந்தியாவில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சிறுமியின் பெயரை ஆபாசத் தளங்களில் பலர் தேடியுள்ளதாக 'பகீர்' தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் ஜம்மு மற்றும் காஷீமீர் மாநிலத்தில் அமைந்துள்ள கத்துவா பகுதியில் 8 வயது சிறுமையை பலர் கொடூரமாக பலாத்காரத்திற்கு உட்படுத்தி கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டது, இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பெருவாரியான பொதுமக்கள் வீதிகளில் இறங்கி குறித்த சிறுமிக்கு நீதி வேண்டும் எனக் கேட்டு போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இந் நிலையில், சமூக வலைத் தளத்தில்  இந்த விவகாரம் தொடர்பில் அதிர்ச்சி தகவல் ஓன்று வெளியாகி உள்ளது. அதில் சமூக வலைதளத்தில் அதிகம் பேசப்படும் சம்பவமாக மாறியுள்ள சிறுமியின் பெயரானது, பிரபல ஆபாச தளத்தில் அதிகமானோரினால்  தேடப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.

சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில் அது தொடர்பான காணொளி வெளியாகியுள்ளதா? என்பதையே அந்த  ஆபாச தளத்தில் அதிகமானோர் சென்று தேடியுள்ளார்கள் என்ற கேவலமான உண்மை இப்போது அம்பலமாகி உள்ளது.

நாடே அந்தக் கொடூர சம்பவத்திற்கு  துக்கப்படும் நிலையில், வக்கிர கும்பலொன்று தொடர்புடைய  பாலியல் காணொளிக்காக ஆபாச வலைத் தளத்தில் சிறுமியின் பெயரைப் பயன்படுத்தி தேடியுள்ள செயல்,  இது சமூக வலைத்தள பயனாளர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS