யாரு குறை சொன்னா என்ன? 'பிக் பாஸ்' பார்ப்பவர்கள் 4 கோடி பேர் தெரியுமா..!

தமிழகம்
Typography

சென்னை, ஜூலை.14- ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்கு எதிராக புகார்கள் குவிந்து வரும் நிலையில், நிகழ்ச்சிக்கு எதிர்பார்ப்பும் ‘டி.ஆர்.பி ரேட்டும்’ அதிகமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியை இந்தியாவில் மட்டும் 4 கோடி பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சி நமது கலாச்சாரத்திற்கு எதிரானது. அந்த நிகழ்ச்சியில் அசிங்கமாக பேசியும், கவர்ச்சியாகவும் நடித்து வருகிறார்கள், எனவே இந்த  நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு அளித்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளவர்களில் ஓவியா தான் குட்டி, குட்டியாக ஆடை அணிந்து குத்தாட்டம் போடுவதாகவும். அவரது குத்தாட்டத்திற்காகவே பலர் நிகழ்ச்சியை பார்ப்பதாகவும் பலர் கூறியுள்ளனர்.

இந்நிலையில், ஓவியா அணியும் உடையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் அவர் தோப்புக்கரணம் போட வந்தபோது, ‘உங்கள் உடை கவர்ச்சியாக உள்ளது இந்த நிகழ்ச்சியை குழந்தைகளும் பார்க்கிறார்கள், எனவே உடையை மாற்றிவிட்டு வாங்க’ என்று சக போட்டியாளர்கள் தெரிவித்தது கூறிப்பிடத்தக்கதாகும் .

மேலும், சமூகவலைதளங்களில் ஒருவர் விடாமல் சகட்டுமேனிக்கு ‘கேலி’ செய்யப்பட்டு வரும் நிலையில், பிக் பாஸ் குழு எதை பற்றியும் கவலைபடாமல் அதுதான் நமது நிகழ்ச்சிக்கு கிடைத்த வெற்றி எனவும் கூறியுள்ளது.

ஜல்லிக்கட்டு ஜூலியின் ‘வீர தமிழச்சி’ என்ற பெயர், முழுவதும்மாக “டேமேஜ்” ஆன நிலையிலும் எதைப்பற்றியும் கவலை படாமல் நிகழ்ச்சியில் கவனம் செலுத்துகிறார். 

காயத்ரி மற்றும் ஆர்த்தியை சீரியல் வில்லி அளவிற்கு மாற்றி நிகழ்ச்சியின் சூடு குறையாமலும், ஓவியாவை கவர்ச்சியாக்கி இளைஞர்களின் ஒட்டுமொத்த ஓட்டுகளையும் பெற்று அசத்தி வருகிறது இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி. 

இது பற்றி, தினமும் இரவு குடும்பமே தொலைகாட்சிக்கு முன்னால் அமர செய்ததிலேயே நிகழ்ச்சி வெற்றி பெற்று விட்டதாக ‘பிக்பாஸ்’ குழு தெரிவித்துள்ளது. 

BLOG COMMENTS POWERED BY DISQUS