சும்மா குறைகூறுவதா? களத்திற்கு வரட்டும் கமலஹாசன்! -கருணாஸ்

தமிழகம்
Typography

சென்னை, ஜூலை.15-  நடிகர் கமல்ஹாசன் 'சிஸ்டம்' சரியில்லை என்று விமர்சனம் செய்தால் மட்டும் போதாது. களத்திற்கு வந்து போராட வேண்டும் என நடிகரும் எம்.எல்.ஏவுமான கருணாஸ் கூறியுள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு 'பிக்பாஸ்' நிகழ்ச்சி குறித்து, கமல் உள்ளிட்ட அதில் கலந்துகொண்டோரை கைது செய்யவேண்டும் என இந்து மக்கள் கட்சியினர் சென்னை காவல் ஆணையரிடம் புகார் மனு  அளித்திருந்தனர். 

இதுதொடர்பாக நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், என்னை கைது செய்ய வேண்டும் என்று பலர் சொல்கிறார்கள், அதை பற்றி எனக்குக் கவலை இல்லை. என்னைக் கைது செய்ய வேண்டும் என்றால் அது நடக்கட்டும்.

சட்டத்தின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. நீதியின் மீதும் நம்பிக்கை இருக்கிறது. அந்தச் சட்டம் என்னை பாதுகாக்கும். என்னை கைது செய்யக்கூறும் கூட்டத்துக்கு, நாண் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று அதிரடியாக பதிலளித்துள்ளார்.

மேலும், அவர் அரசியல் பற்றிக் கூறுகையில், மத்திய மாநில அரசுகளின் செயல்பாடுகளுக்கு 'மார்க்' போட மாட்டேன், ஓட்டு மட்டுமே போடுவேன். இங்கு அனைத்துத் துறைகளிலும் லஞ்சமும், ஊழலும் இருக்கத்தான் செய்கிறது எனவும் சினிமாவின் மீதான ஜி.எஸ்.டி.வரியை நாங்கள் கோரியது போல் குறைக்கவில்லை. ‘குளிர்பானங்களுக்கு அளிக்கப்படும் மரியாதை கூட சினிமாவிற்கு வழங்கப்படவில்லை’ என்பது வருத்தம் அளிக்கிறது என்றார். 

மேலும், 'சிஸ்டம்' சரியில்லை என்று ரஜினி கூறிய கருத்தில் எந்த தவறு இல்லை, இது நான் ஏற்கனவே சொன்ன கருத்துதான் என்றும் கூறினர்.

இந்நிலையில், தமிழக சட்டமன்ற கூட்டதொடருக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆளும்கட்சியின் கூட்டணி சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான கருணாஸ் கூறுகையில், நடிகர் கமலஹாசன் மீது தொடர்ந்து நன்மதிப்புக்களை வைத்துள்ளேன்.

'சிஸ்டம்' சரியில்லை என்று விமர்சனம் செய்தால் மட்டும் போதாது, சீர்திருத்தம் வேண்டுமானால் அவர் களத்திற்கு வந்து போராட வேண்டும். சிஸ்டத்தை மாற்ற வேண்டிய பொறுப்பு கமல்ஹாசனுக்கும் மற்றும் அனைவருக்குமே உள்ளது என்றார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS