பிக் பாஸ்: ஓவியா தற்கொலை முயற்சி! காதல் தோல்வியா?

தமிழகம்
Typography

சென்னை, ஆக.5- பிக் பாஸ் போட்டியாளர் ஓவியா தற்கொலை முயற்சி செய்துள்ளது அவரின் ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு ஆர்வ் மீதான தனது காதல் தோல்வியில் முடிந்தது தான் காரணமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பிக் பாஸ் வீட்டில் ஓவியாவுக்கு ஆதரவாக இருந்த ஆரவ் சமீப காலமாக அவருக்கு எதிராக திரும்பியுள்ளார். ஆரம்பத்திலிருந்தே ஓவியாவுடன் மிக நெருக்கமாக பழகிய ஆரவ் தற்பொழுது அவரை விட்டு விலகி வருவதால் ஓவியா பெரும் மன உழைச்சலுக்கு ஆளானார்.

தன்னைக் காதலிக்கிறாயா என்று ஆரவிடம் கேட்ட பொழுது, ‘காதலிக்கவில்லை’ என்ற ஆரவ் பதிலளித்தார். இதனை ஓவியாவால் சற்றும் ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில் அவர் தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டார். அப்பொழுது, பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் அவரை உடனடியாக காப்பாற்றினர். மேலும், பிக் பாஸ் வீட்டில் இருக்கப் பிடிக்கவில்லை. நான் எங்க வீட்டுக்குப் போகிறேன் என்று ஓவியா அடம்பிடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, மக்கள் மத்தியில் ஓவியாவுக்குப் ‘ஓவியா ஆர்மி’ எனும் ரசிகர் மன்றம் பெருகி வரும் நிலையில், தற்பொழுது ஓவியாவின் நடவடிக்கை மக்களிடையே சற்று எரிச்சலைக் கிளப்ப தொடங்கியுள்ளது. 

இதற்கு முன்பு உண்மையாக இருந்த ஓவியா தற்பொழுது பொய்யாக நடிக்கத் தொடங்குகிறாரா என்று சில தரப்பினர் கூறி வருகின்றனர். மேலும், இத்தனை நாட்களாக ஓவியாவை நல்லவராகக் காட்டிய பிக் பாஸ் திடீர் பல்ட்டி அடித்துள்ளார். தற்போது ஓவியாவைக் கெட்டவராக காட்டி வருகிறார் பிக் பாஸ் என்று ஓவியாவின் தீவிர ரசிகர்கள் வலைதளங்களில் கொந்தளித்துள்ளனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS