அனிதா மரணம்: நீதிகேட்டு ஜெயலலிதா  சமாதியில் போராட்டம்! போலீஸ் கலைப்பு!

தமிழகம்
Typography

 சென்னை, செப்.6- நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரியும் மாணவி அனிதா மரணத்திற்கு நீதி கோரியும் சென்னை மெரினா கடற்கரையிலுள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் போராட்டத்தில் குதித்த மாணவர்களைப் போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்ப டுத்தினர்.

நீட் தேர்வால் மருத்துவம் படிக்கும் தனது கனவு கலைந்ததால் மாணவி அனிதா கடந்த 1ஆம் தேதி தூக்கிலிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு அரசுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து அரசியல் அமைப்புகள், மாணவர் அமைப்புகள் ஆகியவை கடந்த 5 நாள்களாக் போராடி வருகின்றன.

இந்நிலையில் ஜல்லிக்கட்டுப் போராட்டம் போல் மாணவர்கள் திரண்டு விடக்கூடாது என்பதற்காக போலீசார் அப்பகுதியில் பாதுகாப்பு வளையத்தை ஏற்கெனவே பலப்படுத்தி இருந்தனர். வாகனப் போக்குவரத்தையும் தடைசெய்திருந்தனர்.

இதனிடையே சென்னை மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்தில் மாணவர்கள் நுழைந்தனர். தடுப்புக்களைத் தாண்டி சமாதியில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். அவர்களை வெளியேற்றப் போலீசார் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அங்கிருந்து வெளியேற மாணவர்கள் மறுத்ததால் அவர்களைக் குண்டுக் கட்டாகத் தூக்கிப் போலீசார் அப்புறப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS