முதலை மீதே சவாரி செய்யும் ஓவியா! 'எங்க தலைவிடா..' ஆர்மி பெருமிதம்!

தமிழகம்
Typography

 

சென்னை, செப்.20- பிக் போஸ் இல்லத்தில் வாழ்ந்த காலத்தில் பல 'முதலை'களை சந்தித்தவர்தான் நடிகை ஓவியா. அதை விட்டு வெளியேறிய பின்னர், முதலை மீதே சவாரி செய்யும் படத்தை வெளியிட்டு பரப்பரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். ‘எங்க தலைவியை பார்த்தீங்களா சார்..’ என்று ஓவியாவின் ஆர்மி ஏகத்திற்கு வலைத்தளங்களில் குதூகலித்திருக்கிறது. 

நடிகை ஓவியா முதலை மீது அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது. பிக் பாஸ் வீட்டில் இருந்து கிளம்பிச் சென்ற ஓவியா, மனதிற்கு பிடித்ததை எல்லாம் செய்து வருகிறார். 

இதற்கிடையே படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். அவருக்குப் பட வாய்ப்புகள் வந்து குவிகின்றன. ஓவியா முதலை மீது அமர்ந்து சிரித்துக் கொண்டிருக்கும் புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் பரவியது. பெரிய முதலை வாய் திறந்தபடி உள்ளது. ஓவியாவின் தைரியத்தை பார்த்த ரசிகர் ஒருவர் 'எங்க தலைவிடா..,' என்று பெருமையாக கூறியுள்ளார். 

அதேவேளையில் ஓவியாவின் முதலைச் சவாரியைக் குறித்து அவருடைய ஆர்மி பெருமையாக வலைத்தளங்களில் பல்வேறு விமர்ச னங்களைப் பதிவு செய்து குதூகலித்து வருகிறது. 

BLOG COMMENTS POWERED BY DISQUS