ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்காது! புரட்சிதான் வெடிக்கும்! -இயக்குனர் கௌதமன்

தமிழகம்
Typography

 

சென்னை, அக்.5- இலங்கை அதிகாரி வர்க்கம், தழிழ் மக்களுக்கு தீர்வையோ, நீதியையோ வழங்கப் போதில்லை என தமிழீழ உணர்வாளர் இயக்குநர் கௌதமன் தெரிவித்துள்ளார். அத்துடன், ஐக்கிய நாடுகள் சபையினால் வழங்கப்பட்டுள்ள இரண்டு ஆண்டு கால அவகாசத்தில் அவர்கள் எதனையும் நிறைவேற்றப் போவதில்லை என்றார் அவர். 

ஜெனிவாவில் இடம்பெற்ற ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத் தொடரில் கலந்துகொண்டு நாடு திரும்பிய அவர், சென்னை விமான நிலைத்தில்  ஊடகங்கச் செய்தியாளர்களிடம் பேசிய போது இவ்வாறு கூறியுள்ளார். 

தொடர்ந்து உரையாற்றிய அவர், போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வை வழங்கவேண்டும் என 2009-ஆம் ஆண்டில் அமெரிக்க கூறியிருந்தது. அவ்வாறு வழங்காது போனால் 10 ஆண்டுகளுக்குள் அங்கு எழுகின்ற புரட்சிப் போராட்டத்தை யாராலும் தடுக்க முடியாது எனவும் அமெரிக்கா கூறியது.

பத்து ஆண்டுகளில் எட்டு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. இது வரையில் எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்கப்படாத  நிலையில், இலங்கை அரசிடம் இருந்து தழிழர்களுக்கு ஒருபோதும் நீதி கிடைக்காது.

இந்நிலையில், அமெரிக்கா குறிப்பிட்டதைப் போல தமிழ் மக்களின் கொதிப்பு, அடித்தது புரட்சிப் போராட்டமாக மாறும். அதற்குள் இந்தியா தலையிட்டு இந்தப் பிரச்சனைக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். அவ்வாறு இல்லாது போனால் இந்தியாவை ஒருபோதும் காப்பாற்றிக்கொள்ள முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS