குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய நடிகர் ஜெய்க்கு கைது உத்தரவு!

தமிழகம்
Typography

 

சென்னை, அக்.-6 குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய நடிகர் ஜெய்க்கு ஜாமீனில் வெளிவர முடியாத கைது உத்தரவை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

குடிபோதையில் ஜெய், காரை ஓட்டி வந்து, கடந்த மாதம் 21-ஆம் தேதி அடையாறு மேம்பாலத்தில் மோதி விபத்துக்கு உள்ளாக்கினார். இது சம்பந்தமாக அடையாறு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவுப் போலீசார் ஜெய் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கு அக்டோபர் 3 ஆம் தேதி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில் நடிகர் ஜெய் நேரில் சரணடைந்தார்.

பத்திரிகையாளர்களுக்கு தெரியாமல் இரகசியமாக நீதிமன்றத்திற்குள் வந்துவிட்டு வெளியேறினார் ஜெய்.

இது தொடர்பான வழக்கு விசாரணை நாளையும் நடைபெறும் என்பதால், நடிகர் ஜெய், நீதிமன்றத்திற்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே ஜெய்க்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது நீதிமன்றம். நாளை அவர் ஆஜராகவேண்டும் என்று நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS