சசிகலாவுக்கு 5 நாள் 'பரோல்' அனுமதி!

தமிழகம்
Typography

பெங்களூரு, அக்.6- சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு கர்நாடகச் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்துவரும் சசிகலா ஐந்து நாள்கள் 'பரோல்' செல்ல நீதிமன்றம் இன்று அனுமதி அளித்தது. 

மருத்துவமனையில் சிகிச்சைp பெற்று வரும் அவருடைய கணவரான நடராஜனைப் பார்ப்பதற்கு அனுமதிக்கும் வகையில் பரோலில் சென்னை செல்ல அவருக்கு அனுமதிக்கப்பட்டது. 

இதற்கு முன்பு அவர் செய்துகொண்ட பரோல் விண்ணப்பங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன எனது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் தனியார் மருத்துவமனையில் சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. 

இதற்காக 15 நாள்கள் பரோலில் செல்ல தமக்கு அனுமதி அளிக்கவேண்டும் என்று சசிகலா நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்திருந்தார். இதனை பரிசீலித்த நீதிமன்றம் 5 நாள்களுக்கான அனுமதியை மட்டுமே வழங்கியது. 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS