ஒருநாள் 'டேட்டிங்' வேணுமா? ரசிகர்களுக்கு நடிகை ரேஷ்மி தரும் பரபரப்புச் சலுகை!

தமிழகம்
Typography

 ஹைதராபாத், அக்.-7 இதுவரை இந்தியாவிலேயே இப்படியொரு சலுகை யை யாரும் வழங்கி இருக்கமுடியாது. அப்படியொரு தாராளமான மனதோடு அப்படியொரு வித்தியாசமான சலுகை அறிவிப்பைச் செய்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் தெலுங்கு நடிகை ரேஷ்மி கௌதம்.

தமிழிலும் நடித்தவர்தான் ரேஷ்மி கவுதம். 'கண்டேன்', 'மாப்பிள்ளை' 'விநாயகர்' ஆகிய படங்களில் நடித்தவர். தமிழில் அதற்கு பின் வாய்ப்பு இல்லாததால் தெலுங்கில் மட்டும் கவனம் செலுத்துகிறார். 

அவர் நடித்திருக்கும் 'நெக்ஸ்ட் நுவ்வு' எனும் தெலுங்குப் படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தை 5 ஆயிரம் முறை பார்ப்பவருடன் ஒருநாள் 'டேட்டிங்' செல்ல தயாராக இருப்பதாக அறிவித்திருக்கிறார்.

இதை தன்னுடைய குரலில் வீடியோவாக எடுத்து டுவிட்டரில் வெளியிட்டிருக்கிறார். நடிகையுடன் 'டேட்டிங்' என்றால் சும்மா இருப்பார்களா? இப்போதே முன்பதிவு செய்ய தொடங்கியிருக்கிறார்கள்.

ஐந்து ஆயிரம் டிக்கெட்டுகளும் 5 லட்சம் ரூபாய் வரும். ஒன்றுக்கு மேற்பட்ட ரசிகர்கள் இந்த சவாலில் ஜெயித்தால் ரேஷ்மியின் நிலையென்ன ஆகும்? என்று சில வலைத்தளவாசிகள் வம்படித்திருக்கிறார்கள்.

BLOG COMMENTS POWERED BY DISQUS