அரசியலில் கமல் ஜெயிக்க முடியாது! -அண்ணன் சாருஹாஸன்

தமிழகம்
Typography

சென்னை, அக்.9- கமல், ரஜினி ஆகியோர் சேர்ந்து கட்சி துவங்கினாலும் 10 விழுக்காடு ஓட்டுக் கூட கிடைக்காது என்கிறார் கமலின் மூத்த சகோதரரும் நடிகருமான சாருஹாஸன். 

டுவிட்டரில் தமிழக அரசை விமர்சித்து வந்த கமல்ஹாசன், முழு நேர அரசியலில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளார். அரசியலுக்கு வந்த பிறகு நடிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப் போகிறார். புதுக் கட்சி துவங்கும் எண்ணத்தில் உள்ளார் கமல்ஹாசன்.

தமிழகத்தில் திமுக, அதிமுக தான் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ள கட்சிகள். இந்நிலையில் மூன்றாவதாக ஒரு கட்சியை துவங்குவதில் எந்தப் பலனும் இல்லை என்கிறார் சாருஹாஸன். 

அரசியலுக்கு வந்தால் கமல்ஹாசனால் வெற்றி பெற முடியாது. யாராக இருந்தாலும் நடிகன் என்பதை தாண்டி அரசியலுக்கு வர பக்குவம் தேவை. ஜெயலலிதா முதல்வரானாரே என்றெல்லாம் கேட்க வேண்டாம் என சாருஹாஸன் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா நடிகை என்பதால் மட்டும் அரசியலுக்கு வரவில்லை. நடிகை என்பதை தாண்டியும் அவருக்கு அங்கீகாரம் இருந்தது. கமல், ரஜினி ஆகியோர் சேர்ந்து கட்சி துவங்கினாலும் 10 விழுக்காடு ஓட்டுக் கூட கிடைக்காது என்கிறார் சாருஹாஸன். 

கமல்ஹாசனை போன்றே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் அரசியலுக்கு வருகிறார். இருவரின் கட்சி குறித்த அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்துக் கிடக்கிறார்கள்

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS