கருணாநிதியுடன் கருணாஸ் உட்பட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் திடீர் சந்திப்பு..!

தமிழகம்
Typography

சென்னை, நவ.17- திமுக தலைவர் கருணாநிதியை அ.தி.மு.க ஆதரவு எம்.எல்.ஏக்கள் கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு ஆகியோர் நேற்று திடீரென சந்தித்து நலம் விசாரித்தனர். முதுமையால் கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டு ஓய்வில் இருந்து வருகிறார்.

அவரை பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் அதிமுக ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கான கருணாஸ், தமிமுன் அன்சாரி மற்றும் ஆகியோர் நேற்று இரவு கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தனர். 

இச்சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிமுன் அன்சாரி, முதுபெரும் அரசியல் தலைவர் என்ற அடிப்படையில் கருணாநிதியை சந்தித்தோம். எங்களை பார்த்த உடன் கையை உயர்த்தி வாழ்த்து தெரிவித்தார். இச்சந்திப்பு என்பது மரியாதை நிமித்தமானது மட்டுமே. இதில் அரசியல் எதுவுமில்லை. கருணாநிதி முழுமையாக குணமடைந்து அவரது குரல் விரைவில் ஒலிக்க வேண்டும் என்பது எங்களது விருப்பம் என்றார். 

BLOG COMMENTS POWERED BY DISQUS