ஆம்பூர் பிரியாணி: ஆட்டுக் கறியுடன் நாய் கறி கலந்து சமைத்து விற்பனை; இருவர் கைது!

தமிழகம்
Typography

சென்னை, நவ.20- பிரியாணிக்கு பிரபலமான ஆம்பூரில் ஆட்டுக் கறியுடன் நாய் கறியைக் கலந்து பிரியாணி சமைத்து விற்பனை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திண்டுக்கல் பிரியாணி, ஆற்காடு பிரியாணியை போல் ஆம்பூர் பிரியாணியும் மக்கள் மத்தியில் பிரசித்தி பெற்றுள்ளது. குறிப்பாக இங்கு விற்கப்படும் ஆட்டுக் கறி பிரியாணி உலக அளவில் பிரபலம்.

இங்கு சண்டே ஸ்பெஷல் என கூறிக் கொண்டு புது வகை பிரியாணி என்ற ஒன்றை ஆம்பூரில் ஒரு சிறிய கடையில் போட்டுள்ளனர். பிரியாணியைச் சுவைத்த மக்கள் அதில் ஆட்டுக் கறியுடன் வேறு எதையோ கலப்படம் செய்திருப்பதை அறிந்து காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விற்பனை செய்து வந்த இருவரிடம் துருவி துருவி விசாரணை நடத்தினர். அப்போது தான் அந்த அதிர்ச்சிகரமான தகவல் தெரியவந்தது.

ஆட்டுக்கறியின் விலை உயர்வால் அந்த கறியுடன் நாய் கறியையும் சேர்த்து சமைத்ததாக இவ்விருவரும் கூறியுள்ளனர். இதனைக் கேட்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS