ஜெயலலிதா நினைவு நாள் துக்க தினமாக அனுசரிப்பு; பேரணியாக வந்து அஞ்சலி செலுத்திய தலைவர்கள்!

தமிழகம்
Typography

சென்னை, டிச.5- மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை துக்க தினமாக அனுசரித்து முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் அமைதி ஊர்வலம் ஒன்று நடைபெற்றது. 

சென்னை அண்ணா சாலையிலிருந்து தொடங்கிய இந்த அமைதி ஊர்வலம், ஜெயலலிதா நினைவிடத்தில் முடிவடைந்தது. இதில், அதிமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். 

இதில் கலந்து கொண்ட பலர், கறுப்பு நிற ஆடையில் வந்திருந்தனர். வந்தவர்கள் அனைவரும், மௌனமாக ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர்களை தூவி மரியாதை செலுத்தினர். 

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி காய்ச்சல் மற்றும் நீர் சத்து குறைபாட்டினால் ஜெயல்லிதா, சென்னை அப்பால்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 74 நாள்கள் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவருக்கு டிசம்பர் 4-ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டது. சிகிச்சைகள் ஏதும் பலனளிக்காமல், டிசம்பர் மாதம் 5-ஆம் தேதியன்று அவர் மரணமடைந்தார். 

BLOG COMMENTS POWERED BY DISQUS