பிரபல இசையமைப்பாளர் ஆதித்யன் காலமானார்!

தமிழகம்
Typography

 

ஹைதராபாத், டிசம்.6- பிரபல திரைப்பட இசையமைப்பாளர் ஆதித்யன் (வயது 63) சிறுநீரகக் கோளாறு காரணமாக ஹைதராபாத்தில் ஒரு வாரமாக சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் நேற்று மதியம் 11-மணியளவில் சிகிச்சைப் பலனின்றி காலமானார். 

இவரது உடல் ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு எடுத்து வரப்படும் நாளை மதியம் இறுதி சடங்கு நடைபெறும். 

"அமரனை" தொடர்ந்து 'நாளைய செய்தி', 'சீவலப்பேரி பாண்டி', 'லக்கி மேன்', 'அசுரன்', 'மாமன் மகள்', 'சூப்பர் குடும்பம்' கடைசியாக  'கோவில்பட்டி வீரலட்சுமி' உள்ளிட்ட தமிழ்ப் படங்கள் மற்றும் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் இசையமைப்பாளராக ஆதித்தன் பணியாற்றி உள்ளார். இவரது இயற்பெயர் டைடஸ் (Titus) என்பதாகும். 

இவருக்கு ஷோபியா என்ற மனைவியுள்ளார். மற்றும் ஷரோன், பிரார்த்தனா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இருவரும் திருமணமாகி ஹைதராபாத்தில் வாழ்ந்து வருகிறார்கள்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS