சென்னையில் கொடூரம்: தாய், மனைவி, இரண்டு குழந்தைகள் கழுத்தறுத்துக் கொலை!

தமிழகம்
Typography

சென்னை, டிச.12- இங்கு பல்லாவரம் பம்மல் பகுதியில் உள்ள திருவள்ளூர்நகர் ரங்கநாதன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் தாமோதரன். இவருக்கு ரோஷன் மற்றும் மீனாட்சி என்று இரு பிள்ளைகள் உள்ளனர். இவரின் மனைவி தீபா.  

தாமோதரன் நடத்தி வந்த தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் அவருக்குப் பல இன்னல்கள் ஏற்பட்ட. ஆதலால், தன் குடும்பத்தினருடன் சேர்ந்து தனது உயிரை மாய்த்துக் கொள்ள அவர் தீர்மானித்தார். அதனைத் தொடர்ந்து, தனது தாயார், மனைவி தீபா மற்றும் இரண்டு குழந்தைகளின் கழுத்தை அறுத்து படுகொலை செய்தார். பின்னர் தனது சொந்தக் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு அவர் முயற்சித்துள்ளார். 

மற்ற நான்குபேரும் கொலை செய்யப்பட்ட நிலையில் தாமோதரம் உயிர் மட்டும் ஊசலாடிக்கொண்டிருந்தது. அதனைக் கண்ட அவரின் அண்டை வீட்டாளர்கள், அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தாமோதரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குடும்பத்தில் உள்ள நான்கு பேரின் கழுத்தை அறுத்து படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS