போகி பண்டிகை: புகை மூட்டத்தில் சென்னை!  தரையிறங்க முடியாமல் விமானங்கள் தவிப்பு

தமிழகம்
Typography

சென்னை, ஜன.13- பொங்கலுக்கு முதல் நாளான இன்று சென்னையில் போகி கொண்டாடிய மக்களால் எரிக்கப்பட்ட பொருள்களில் இருந்து கிளம்பிய புகையுடன் பனி மூட்டமும் சேர்ந்து கொண்டதால், சென்னை விமானநிலையத்தில் தரையிறங்க வேண்டிய 12 விமானங்கள் திருப்பிவிடப்பட்டன.

தமிழகம் முழுவதும் பொங்கல் அமோகமாக களைகட்டி விட்டது இந்நிலையில் இன்று போகி என்பதால்  பழையன கழிதல் என்பதற்கொப்ப பழைய பொருள்களை எரிப்பதை அதிகாலையிலேயே மக்கள் தொடங்கி விட்டனர். சென்னையைச் சுற்றிலும் இதனால் கரும் புகை வானத்தை சூழ்ந்தது.

மார்கழி கடைசி என்பதால் பனி மூட்டமும் கடுமையாக இருந்தது.  இந்தப் புகை மூட்டமும் சேர்ந்து விமானங்கள் தறையிறங்குவதற்கு பாதகமாக அமைந்து விட்டன. அதேவேளையில் சாலைகளிலும் இந்தப் புகை மூட்டத்தினால் போக்குவரத்துகள் பெரிதும் பாதிப்படைந்தன.

சென்னை விமான நிலையத்தில் ஓடுபாதைகளை  புகை மூட்டம் மறைத்தால் அதிகாலையில் விமானங்கள் தறையிறங்க அனுமதிக்கப்படவில்லை. அதே போன்று காலையில் விமானங்கள் எதுவும் புறப்படவும் அனுமதிக்கப்படவில்லை.

சென்னையில் தரையிறங்க வேண்டிய 12 விமானங்கள் ஹைதராபாத்திற்கு திசை திருப்பி விடப்பட்டன.  அதேவேளையில் சென்னயில் இருந்து புறப்படவிருந்த 30 விமானங்களின் பயணமும்  தாமதமானது.

 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS