ரஜினியால் 33 தொகுதிகளில்தான் வெல்ல முடியும்; ஆட்சி அமைக்க முடியாது: இந்தியா டுடே சர்வே!

தமிழகம்
Typography

சென்னை, ஜன.17- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்கி சட்டசபை தேர்தலில் போட்டியிட்டால் அவரால் 33 இடங்களில் தான் வெல்ல முடியும். ஆட்சி அமைக்க முடியாது என்று 'இந்தியா டுடே' கருத்து கணிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

தமிழகத்தில் தேர்தல் நடைபெற்றால் தி.மு.க 130 இடங்களில் வென்று ஆட்சியைக் கைப்பற்றும். கடந்த 2016 ஆண்டு தேர்தலை விட தி.மு.கவுக்கு 32 இடங்கள் கூடுதலாக கிடைக்கும் என்று இந்தியா டுடே- கார்வி நிறுவனம் இணைந்து தமிழக அரசியல் நிலவரம் குறித்து நடத்திய கருத்து கணிப்பு முடிவு தெரிவித்துள்ளது. 

தற்போது ஆளும்கட்சியான அ.தி.மு.க எதிர்வரும் தேர்தலில், படுதோல்வியைச் சந்திக்கும். அக்கட்சிக்கு 68 இடங்கள் மட்டும்தான் கிடைக்கும். 2016 ஆண்டுத் தேர்தலில் வென்ற 68 தொகுதிகளை அ.தி.மு.க இழக்கும் என்று அந்த ஆய்வு கூறியுள்ளது. 

இதனிடையில், ரஜினிகாந்தின் கட்சி 33 தொகுதிகளில் வெல்லும். இதர கட்சிகள் 3 இடங்களில் வெற்றி பெறும் என்று அக்கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கினாலும், அவரால் ஆட்சி அமைக்க முடியாது என்று இந்தியா டுடேவின்  கருத்து கணிப்பு கூறியுள்ளது. 

அரசியலில் ரஜினி வெல்வாரா என்ற கேள்விக்கு 53 விழுக்காட்டினார், கண்டிப்பாக ரஜினி வெல்வார் என்று கூறியுள்ளனர். 34 விழுக்காட்டினர், அவரால் அரசியலில் வெல்ல முடியாது என்று தெரிவித்தனர். ரஜினியின் அரசியல் எதிர்காலம் குறித்து இப்போது எவ்வித கருத்து தெரிவிக்க முடியாது என 13 விழுக்காட்டினர் கூறியுள்ளனர்.

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS