'சுராங்கனி' புகழ்  'பாப்' பாடகர்  சிலோன் மனோகர் காலமானார்!

தமிழகம்
Typography

சென்னை, ஜன.23- இலங்கையின் பிரபல பாப் இசைப் பாடகரான சிலோன் மனோகர் என்ற ஏ.இ. மனோகரன் (வயது 73) நேற்று இங்கு காலமானார். பல மொழிகளில் பாடும் திறன் கொண்ட மனோகர்,  கோடிக்கணக்கான இசை நெஞ்சங்களைக் கவர்ந்தவர். 

இவர் பாடிய 'சிராங்கனி.., சுராங்கனி..,' என்ற இலங்கைப் பாடல் இந்திய ரசிகர்களிடையேயும் பிரபலமான ஒன்றாகும்.  சிலோன் மனோகர் என்ற பெயரில் தென்னிந்திய திரைப்படங்களில் பாடியும் நடித்தும் வந்த இவர் சில காலமாக உடல் நலம் குன்றியிருந்ததாகத் தெரிகிறது.

தமிழ் மற்றும் இந்திப் படங்களில் நடித்திருக்கும் மனோகர் தொடர்ந்து தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார். 

BLOG COMMENTS POWERED BY DISQUS