நடிகை ஸ்ரேயாவுக்கு திருமணம்! ரஷ்ய காதலரை மணக்கிறார்!

தமிழகம்
Typography

 சென்னை, பிப்.7-   நடிகை ஸ்ரேயாவுக்கும் அவரது ரஷ்ய காதலருக்கும் அடுத்த மாதம் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 

2001-ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமான நடிகை ஸ்ரேயா,  'மழை' படத்தில் கதாநாயகி நடித்தார். ரஜினிகாந்த் ஜோடியாக ஸ்ரேயா நடித்து 2007- இல் வெளிவந்த 'சிவாஜி' படம் நல்ல வெற்றி பெற்றதால் முன்னணி நடிகையாக வருவார் என எதிர்பார்க்கப்பட்டார். 

ஆனால், 'இந்திரலோகத்தில் நா அழகப்பன்' படத்தில் வடிவேலுவுடன் ஒரே ஒரு பாடலுக்கு அவர் நடனமாடியது அவருக்கு பின்னடைவாக அமைந்தது.

ஸ்ரேயா நடித்து பின்னர் வெளிவந்த படங்களும் வெற்றிப் படங்களாக அமையவில்லை. தொடர்ந்து முன்னணி கதாநாயகர்கள் யாரும் ஸ்ரேயாவை அவர்களது படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யவில்லை. இதனால் தமிழ்ப் படங்களில் அவர் நடிப்பது மிகவும் குறைந்தது.

இதற்கிடையே, ஸ்ரேயாவுக்கும் அவருடைய ரஷ்ய காதலருக்கும் மார்ச் மாதம் திருமணம் எனத் தெலுங்கு திரையுலக வட்டாரங்களில் தகவல் பரவியுள்ளது. ஸ்ரேயா தற்போது அவரது வருங்கால கணவர் குடும்பத்தாரைச் சந்திக்க ரஷ்யா சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

 

 

 

 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS