திருவாலங்காடு கோவிலில் விருட்ச மரம் தீப்பற்றியது!  பரபரப்பு!  உடனடியாக பரிகாரப் பூஜை!  

தமிழகம்
Typography

அரக்கோணம், பிப்.8- புகழ் பெற்ற தலமான திருவாலங்காடு சிவன் கோவிலில் ஸ்தல விருட்ச மரம் திடீரென தீப் பற்றி எரிந்ததால் இன்று கோவிலில் பரிகார பூஜைகள் நடத்தப்பட்டன. 

திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற தலம் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர். இக்கோவிலின் ஸ்தல விருட்சமான ஆலமரம் நேற்று பற்றி எரிந்தது.

பக்தர்கள் நெய் தீபம், கற்பூர தீபம் ஏற்றி வழிபட்டபோதுதான் இந்த தீவிபத்து நிகழ்ந்துள்ளது. ஏற்கனவே மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் திருவாலங்காடு சம்பவமும் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இதையடுத்து, கோவில் நடை திறந்த போது தீ விபத்துக்காக பரிகாரப் பூஜைகள் செய்யப்பட்டன. தமிழகத்தில் கோவில்கள் அடுத்தடுத்து தீ விபத்து நிகழ்வது குறித்து, இவைகள் திட்டமிட்ட சதியாகக் கூட இருக்கலாம் என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS