அரசியலுக்கு முன்னோட்டம்: 'நாளை நமதே'- நடிகர் கமலின் புதிய இணையத் தளம்!

தமிழகம்
Typography

சென்னை, பிப்.24- இம்மாதம் 21ஆம் தேதி புதிய அரசியல் கட்சியைத் தொடங்கவிருக்கும் நடிகர் கமல்ஹாசன், அதற்கான முன்னோட்டமாக 'நாளை நமதே' என்ற புதிய இணையத் தளத்தைத் தொடங்கினார்.

அண்மைய காலமாக பல்வேறு அரசியல் கருத்துக்களைக் கூறி தமிழக அரசியலில் புயலைக் கிளப்பை வந்த கமல்ஹாசன்,  குறிப்பாக தமிழக அரசின் இன்றைய ஆட்சிநிலையை மிகக் கடுமையாக விமர்சித்தார்.

இதனைத் தொடர்ந்து அவருக்கு ஆளும் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்புக் கிளம்பிய நிலையில், தாமே புதிய கட்சி ஒன்றைத் தொடங்கப் போவதாக அவர் அறிவித்தார்.

எதிர்வரும் 21 ஆம் தேதி புதிய கட்சியைத் தொடங்கப் போவதாக கூறியிருந்த கமல், அதற்கான அடிப்படை வேலைகளைச் செய்து வருவதாகவும் தெரிவித்திருந்தார். இதே காலக்கட்டத்தில் நடிகர் ரஜினிகாந்தும் புதிய கட்சியைத் தொடங்கப்போவதாக அறிவித்திருத்ததைத் தொடர்ந்து அரசியலில் பரபரப்புக்கள் ஏற்பட்டு வருகின்றன.

வரும் 21ஆம் தேதி ராமேஸ்வரத்திலுள்ள முன்னாள் அதிபர் அப்துல் கலாமின் இல்லத்தில் இருந்து தம்முடைய அரசியல் பயணத்தைத் தொடங்கவிருக்கும் கமல், http://naalainamadhe.maiam.com/ என்ற இணையத்  தளத்தைத் தொடங்கினார். தன்னார்வலர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் இதில் இணையலாம் என்ரு அவர் அழைப்பு விடுத்தார்.

 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS