நடிகர் பார்த்தீபனின் மகள் நிச்சயதார்த்தம்: விருந்தாளியைப் போல் வந்தார் தாய் சீதா!

தமிழகம்
Typography

சென்னை, பிப் 12: 'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தில் நடித்த நடிகர் பார்த்திபனின் மகள் கீர்த்தனாவின் திருமண நிச்சயதார்த்தத்தில் அவ்ருடைய தாயாரும் நடிகையுமான சீதா, ஒரு விருந்தாளியைப் போன்று வந்து கலந்து கொண்டார். 

நடிகர் பார்த்திபன், நடிகை சீதாவின் இளைய மகள் கீர்த்தனாவுக்கும், எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்தின் மகனும் இயக்குனருமான அக்ஸாய்க்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்த நிச்சயதார்த்தத்தில் நடிகை சீதா விருந்தாளியாகக் கலந்து கொண்டார்.

 “என் மகள் காதல் திருமணம் செய்கிறாள். அவளின் காதலை நான் மதிக்கிறேன். நாங்களாக பார்த்தால் கூட இப்படி ஒரு நல்ல மாப்பிள்ளை கிடைத்திருக்க மாட்டார்” என்று சீதா பெருமிதத்தோடுத் தெரிவித்துள்ளார். பார்த்திபனை விவாகரத்துச் செய்துவிட்ட சீதா தனது மகளின் நிச்சயதார்த்தத்தில் கலந்து கொண்டார். தாயும், மகளும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

இந்த திருமண நிச்சயதார்த்தத்தில் இரு வீட்டாரும், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். வரும் மார்ச் மாதம் 8 ஆம் தேதி சென்னையில்  திருமணம் நடைபெறுகிறது. திரையுலக பிரபலங்களின் வீடுகளுக்கு சென்று மகளின் திருமணத்திற்கு வருமாறு அழைப்பிதழ் கொடுத்துக் கொண்டிருக்கிறார் பார்த்திபன். பத்திரிகை வைக்க செல்லும் இடத்தில் எடுக்கும் புகைப்படங்களை அவர் ட்விட்டரில் வெளியிட்டு வருகிறார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS