மலேசிய நிகழ்ச்சி: என்னை விற்கத் திட்டம் போட்டனர்! -அமலாபால் அதிர்ச்சி தகவல்

தமிழகம்
Typography

சென்னை, பிப் 12: மாமிசம் போல் என்னை வியாபாரம் செய்ய திட்டமிட்டனர் என்று  தனக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்தவர் மீது நடிகை அமலாபால் டுவிட்டரில் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார்.

நடிகை அமலாபால் மலேசியக் கலை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடன நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அழகேசன் என்ற தொழில் அதிபர் தொடர்புக் கொண்டுப் பாலியல் தொல்லைக் கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. அவர் மீது அமலாபால் போலீஸ் நிலையத்துக்கு நேரில் சென்றுப் புகார் செய்தார்.

மலேசியாவில் உள்ள தொழில் அதிபர் கொடுக்கும் விருந்தில் கலந்து கொள்ளும்படி அந்த நபர் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து அழகேசனை கைது செய்தனர். 

இந்நிலையில் இதே விவகாரத்தில் மேலும் ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அமலாபால் கலந்து கொள்வதாக இருந்த மலேசிய கலைநிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த மலேசிய நிறுவன ஊழியரான பல்லாவரத்தைச் சேர்ந்த பாஸ்கர் என்பவரைத்தான்  போலீசார் இப்போது கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த கைது நடவடிக்கை இந்த வழக்கின் திடீர் திருப்பமாகக் கருதப்படுகிறது.  

மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய தனியார் நிறுவன மேலாளர் ரசாக் என்பவரும் முன் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இந்த வழக்கில் மேலும் ஒரு சிலர் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

பாலியல் தொல்லைக் கொடுத்தவர் மீது அமலாபால் துணிச்சலாகப் புகார் அளித்ததாக அவருக்குப் பாராட்டுகள் குவிந்தன. நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் பாராட்டு தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். இதற்கு நன்றி தெரிவித்து அமலாபால் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

“எனக்கு நேர்ந்த பிரச்சினையில் நடிகர் விஷால் ஆதரவாகவும் பக்க பலமாகவும் நின்றதற்கு நன்றி. ஒவ்வொரு பெண்ணும் பாலியல் தொல்லைகளுக்கு எதிராக ஒருங்கிணைந்து நிற்பது அவர்கள் கடமையாகும். என்னை மாமிச துண்டு போன்று வியாபாரம் செய்ய அந்த நபர் முயன்றார். அவருடையை நடவடிக்கை எனக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.” -இவ்வாறு அமலாபால் டுவிட்டரில் கூறியுள்ளார்.

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS