இனி நடிக்கும் எண்ணம் இல்லை! - கமல்ஹாசன்

தமிழகம்
Typography

சென்னை, பிப்.14-  விரைவில் அரசியல் கட்சியைத் தொடங்கவிருக்கும் நிலையில் நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து நடிக்கப் போவதில்லை எனத் அறிவித்துள்ளார்.

புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி அதன் கொள்கைகள் குறித்து இம்மாதம் அறிவிப்பார் எனந்திர்பார்க்கப்படுகிறது. 

அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஆங்கில பத்திரிக்கை ஒன்றிற்காக எடுக்கப்பட்ட பேட்டியில், வெளிவர இருக்கும் இரு படங்களைத் தொடர்ந்து நடிக்கும் எண்ணம் இல்லை என்றும், தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாகவும் கமல் தெரிவித்துள்ளார்.

வரும் 21-ஆம் தேதி ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் வீட்டில் இருந்து தனது அரசியல் பயணத்தை கமல் தொடங்க உள்ளார். தொடர்ந்து அதே நாளில் மதுரையில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் கட்சிப் பெயரையும் கொள்கைகளையும் அறிவிக்கவுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS