'கண்' அடிப்பில் ரசிகர்களை கலக்கிய பிரியா வாரியருக்கு தமிழில் நடிக்க ஆசை!

தமிழகம்
Typography

திருச்சூர், பிப்.15- ஒரே 'கண்' அடிப்பிலும் புருவ அசைவிலும் லட்சக்கணக்கான ரசிகர்களின் மனங்களைக் கொள்ளை கொண்ட  மலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியார், தமிழ்ப் படத்தில் நடிக்க வேன்டும் என்ற கனவில் இருப்பதாக கூறியுள்ளார்.

சமூக வலைத் தளங்களில் இவரது புருவ நெரிப்பும், கண் அடிப்பும் தான் பிரதானமாக வலம் வந்து கொண்டிருக்கிறது. இவருக்குப் 'புருவப் புயல்' என்ற பட்டப் பெயரும் இப்போது வந்து விட்டது. இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், தமிழில் பேசியுள்ளார். பிறந்தது கேரளா திருச்சூர் என்றாலும் தனக்கு தமிழ் நன்கு தெரியும் என்கிறார்.

தமிழ்ச் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதுதான் தன் கனவு.  விஜய், விஜய் சேதுபதி போன்றவர்களுடன் இணைந்து நடிக்க விரும்புவதாகவும் பிரியா தெரிவித்துள்ளார். 

குறிப்பாக, தமிழ்ப் படங்களில் நடிக்கும்போது தன் சொந்தக் குரலிலேயே பேச விரும்புகிறார் இவர். பிரியாவின் முதல் படம் 'ஒரு அடார் லவ்'. வரும் மார்ச் 3-ஆம் தேதி இந்தப் படம் வெளியாகிறது. அதற்குள்ளேயே அனைத்து மொழிகளிலும் தேடப்படும் நடிகையாகி விட்டார் பிரியா.

இதனிடையே கண் அடிக்கும் காட்சியில் நடிக்க எத்தனை நாள் பயிற்சி தேவைப்பட்டது என்ற கேள்விக்கு அவர் பதிலளித்துள்ளார்.

’’படத்தின் இயக்குநர் படப்பிடிப்புத் தளத்தில், இது பற்றிச் சொன்னதும் அதை அப்படியே புரிந்து கொண்டு நடித்தேன். அழகாக ஏதாவது செய் என்று இயக்குநர் சொன்னார். அதன்படி செய்தேன்’’ என்று கூறியுனார். 

மேலும் இந்தக் காட்சியை எடுக்க எத்தனை 'டேக்' தேவைப்பட்டது என்ற கேள்விக்கு, ‘’ஒரேயொரு முறைதான் நான் முயற்சி செய்தேன். அந்தக் காட்சியே நன்றாக இருக்கிறது என இயக்குநர் கூறிவிட்டார்’’  என்று பிரியா குறிப்பிட்டார்.

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS