திடீர் சந்திப்பு: ரஜினியுடன் கூட்டணி கமல்ஹாசன் கூட்டணி அரசியலா?

தமிழகம்
Typography

சென்னை,பிப்.18- அரசியல் கட்சி தொடங்கவுள்ள நிலையில் திடீரென ரஜினிகாந்தை நடிகர் கமலஹாசன் சந்தித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சினிமாவில் கோலோச்சும் ரஜினிகாந்தும் கமலஹாசனும் திடீரென அரசியல் களத்தில் குதித்துள்ளனர். கமல்ஹாசன் வரும் 21ஆம் தேதியன்று கட்சி பெயரை அறிவிக்கிறார். அத்துடன் அடுத்தடுத்து பொதுக்கூட்டங்களையும் கமலஹாசன் நடத்துகிறார். 

அதே போல் ரஜினிகாந்தும் அரசியல் கட்சி தொடங்குவதற்காக ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருகிறார். வரும் 20 ஆம் தேதி ரசிகர்களைச் சந்திக்க இருக்கிறார் ரஜினிகாந்த். 

இந்நிலையில் திடீரென ரஜினிகாந்தை கமலஹாசன் இன்று சந்தித்துப் பேசினார். தனித்தனியே பயணிக்கும் ரஜினிகாந்தையும் கமலஹாசனையும் இணைக்கும் முயற்சிகளிலும்  சிலர் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இருவரும் தனித்தனியே அரசியல் பயணம் செய்யவே இதுவரை விரும்புகின்றனர். 

இந்நிலையில், திடீரென ரஜினிகாந்தை கமலஹாசன் சந்தித்திருக்கிறார். இச்சந்திப்பு மூலம் இருவரும் அரசியல் கூட்டணி அமைக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இதை இருவரது ரசிகர்கள் ஏற்பார்களா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS