விஜயகாந்த்தை சந்தித்தார் கமல்: 'வாழ்த்துப் பெற்றேன்' என்கிறார்

தமிழகம்
Typography

சென்னை, பிப்.19- நாளை மறுநாள் புதிய அரசியல் கட்சியின் தொடக்கத்தை அறிவிக்கவிருக்கும் நடிகர் கமல்ஹசான், அரசியலில்ல் தனக்கு மூத்தவர் என்பதால் இன்று நடிகர் விஜயகாந்தை சந்தித்து வாழ்த்துப் பெற்றதாக தெரிவித்தார்.

நடிகர் ரஜினி, திமுக தலைவர் கருணாநிதி ஆகியோரைச் சந்தித்த  கமல், தொடர்ந்து இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது கோயம்பேடு கட்சி அலுவலகத்தில்  சந்தித்தார். 

ரஜினியை சந்தித்த போது, அது பற்றிக் கருத்துரைத்த கமல்,  அரசியல் பயணம் தொடங்குவதற்கு முன்னர் எனக்கு பிடித்தவர்களிடம் சென்று சொல்லிவிட்டு வருவதாக தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் விஜயகாந்துடனான சந்திப்பு குறித்து கமல் செய்தியாளர்களிடம் கூறுகையில், சகோதரர் விஜயகாந்த்தை பார்க்க வந்தேன்.அவரை சந்தித்து ரொம்ப காலம் ஆகி விட்டதால், நலம் விசாரிக்க வேண்டிய கடமை உள்ளது என்று குறிப்பிட்டார்.   

"நான் அரசியல் பயணம் துவங்க உள்ளதால் அவரை சந்தித்து அதற்கான அழைப்பை விடுத்தேன். அவர் ஏற்கனவே கூறி உள்ளார், சினிமாவில் வேண்டுமானால் நாங்கள் மூத்தவர்களாக இருக்கலாம். ஆனால் அரசியலில் இருவரும் எனக்கு ஜூனியர்தான் என்று. நீங்களெல்லாம் அரசியலுக்கு வர வேண்டும் என என்னை வாழ்த்தினார்  என்று கமல்ஹசான் சொன்னார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS