"என்னை பற்றி தப்புத் தப்பா பேசுறாங்க" -ஓவியா  வேதனை

தமிழகம்
Typography

சென்னை, பிப்.20-  பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு, வேண்டும் என்ற என்னைப் பற்றிப் தப்புத் தப்பாகப் பேசுகிறார்கள், எழுதுகிறார்கள் என்று நடிகை  ஓவியா வேதனை தெரிவித்துள்ளார்.

 பிக் பாஸ்  புகழின் விளைவாக, சம்பளத்தை கண்ட மேனிக்கு உயர்த்திவிட்டதாக அவதூறு பரப்படுவது குறித்து விளக்கம் அளித்துள்ளார் ஓவியா. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியாவுக்கு கோலிவுட்டில் மவுசு அதிகரித்தது.  பிக் பாஸ் நிகழ்ச்சியால் அவருக்கு தமிழகத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்தார்கள்.

இதையடுத்தே கோலிவுட்காரர்கள் ஓவியா பக்கம் திரும்பினார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தனக்கு மவுசு அதிகரித்துள்ளதை உணர்ந்த ஓவியா சம்பளத்தை ஒரேயடியாக உயர்த்திவிட்டார் என்று செய்திகள் வெளியாகின. 

"யாரோ வேண்டும் என்றே என்னை பற்றி வதந்தி பரப்புகிறார்கள் . பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நான் என் சம்பளத்தம உயர்த்தவில்லை. நான் எந்த தயாரிப்பாளரிடமும் எனக்கு இவ்வளவு சம்பளம் தான் வேண்டும் என்று கேட்பது இல்லை' என்கிறார் ஓவியா.

'நான் 'களவாணி 2' படத்தில் நடிக்க அதிக சம்பளம் கேட்டதால்  வேறு ஒரு நடிகையை  கதா நாயகி ஆக்கிவிட்டார்கள் என்று வதந்தி பரப்புகிறார்கள். ஆனால் களவாணி 2 படத்தின் நாயகி நான் தான்' என்று ஓவியா தெரிவித்துள்ளார்.

"என்னை பற்றி பல வதந்திகளை பரப்புகிறார்கள் ; அதில் உண்மை இல்லை. நான் நல்ல கதையை தான் எதிர்பார்க்கிறேன். அதிக சம்பளம் எல்லாம் கேட்பது இல்லை' என்று ஓவியா கூறியுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS