கலாமின் அண்ணன் ஆசி: கமலின் அரசியல் பயணம் தொடங்கி விட்டது!  மாலையில் கட்சிப் பெயர்!  

தமிழகம்
Typography

மதுரை,பிப்.21- நடிகர் கமல்ஹாசன் இன்று தமது அரசியல் பயணத்தை ராமேஸ்வரத்தில் மறைந்த மக்கள் அதிபர் அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து தொடங்கினார். அவருக்கு கலாமின் மூத்த சகோதரர் தமது ஆசியை வழங்கினார். மதுரையில் இன்று மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கட்சி பெயர், கொள்கைகள், நிர்வாகிகளை கமல்ஹாசன் அறிவிக்க இருக்கிறார். 

தமிழக அரசியலில் நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவரும் திடீரென அரசியலில் குதித்துள்ளனர். இதில் நடிகர் கமல்ஹாசன் இன்று முதல் அரசியல் பயணத்தைத் தொடங்குகிறார். 

இதையொட்டி மூத்த இடதுசாரித் தலைவர் நல்லகண்ணு, திமுக தலைவர் கருணாநிதி, நடிகர் ரஜினிகாந்த், தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் உள்ளிட்டோரை சென்னையில் சந்தித்து வாழ்த்து பெற்றார். 

தமிழகத்தின் அரசியல் கட்சிகள் உருவெடுத்த இடமான மதுரையில் மாலையில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கட்சியின் பெயர், கொள்கைகள் மற்றும் நிர்வாகிகளை கமல்ஹாசன் அறிவிக்கிறார். 

இப்பொதுக் கூட்டத்தில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் பங்கேற்கலாம் எனக் கூறப்படுகிறது. இப்பொதுக் கூட்டத்தைத் தொடர்ந்து மக்களைச் சந்திக்கும் சுற்றுப் பயணத்தை கமல்ஹாசன் மேற்கொள்கிறார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS