மகளிர் தினம் : கராத்தே வீராங்கனைகளுடன் ரஜினிகாந்த்!  

தமிழகம்
Typography

சென்னை, மார்ச்-8-  இன்று மகளிர் தினம்... மகளிர்களின் சாதனையைப் போற்றும் தினம்  என்பதால், இந்திய கராத்தே வீராங்கனைகளின் வெற்றிக் குழுவைத் தமது இல்லத்தில் வரவேற்று உபசரித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். 

இந்திய கராத்தே போட்டிகளில் பல்வேறு நிலைகளில் வெற்றிகளைக் குவித்த வீராங்கனைகள் இன்று ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்து தங்களின் மகிழ்ச்சியைப் பகிர்ந்துக் கொண்டனர்.

இந்திய கராத்தே சங்கத்தின் தலைவரான தியாகராஜன் மற்றும்அச்சங்கத்தின் தலைமைச் செயலாளரான பாரத்சர்மா ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டனர். 

கராத்தே தியாகராஜன் மற்றும் பாரத் சர்மா ஆகிய இருவரும் இந்திய கராத்தே சங்கத்தின் சார்பில் ரஜினிக்கு நினைவுப் பரிசாக வீரவாள் வழங்கினர்.  

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS