அக்கா ஶ்ரீதேவி மரணம்: அருகிலிருந்த தங்கை ஶ்ரீலதா 'தொலைந்த' மர்மமென்ன?

தமிழகம்
Typography

மும்பை, மார்ச்.11- நடிகை ஶ்ரீதேவி இறக்கும் போது துபாயில் அவருடன் இருந்த அவருடைய தங்கை ஶ்ரீலதா, இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் திடீரென் 'காணாமல்' போனது ஏன்? அவர் மௌனம் சாதிப்பதன் மர்மம் என்ன? என்று மும்பை ஊடகங்கள் கிளறத் தொடங்கியுள்ளன.

தங்களின் உறவினர் ஒருவரின் திருமண நிகழ்வுக்காக துபாய் சென்றைருந்த நடிகை ஶ்ரீதேவி, கடந்த 24 ஆம் தேதி   தங்கும் விடுதியிலுள்ள குளியலறைத் தொட்டியில் இறந்து கிடக்கக் காணப்பட்டார்.

அவரது மரணம் குறித்த சந்தேகத்தின் பேரில் 3 நாள்கள் விசாரணை நடத்திய பின்னர் அவருடைய உடலைத் துபாய் போலீசார் அவருடைய கணவர் போனி கபூரிடம் ஒப்படைத்தனர்.

துபாயில் நடிகை ஶ்ரீதேவியுடன் உடனிருந்த அவருடைய தங்கை ஶ்ரீலதா அதன் பின்னர் எங்குமே தலைகாட்டவில்லை. தனது சகோதரியின் இறுதிச் சடங்கிலோ அல்லது பிரார்த்தனைச் சடங்கிலோ அவர் கலந்து கொள்ளவில்லை என்பதை அறிந்த போலிவுட் வட்டாரங்களும் மும்பை ஊடகங்களும் அது பற்றி இப்போது கேள்வி எழுப்பத் தொடங்கிவிட்டன.

ஶ்ரீலாவின் இந்த மௌனம் பல சந்தேகத்திற்கிடமான கேள்விகளைக் கிளப்பி விட்டிருக்கின்றன. மேலும் ஶ்ரீ தேவி பற்றி யாரிடமும் பேசாமல், யார் கண்ணிலும் படாமல் இருக்குமாறு ஶ்ரீலாதாவுக்கு கபூர் குடும்பத்தினரிடம் இருந்து  உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருப்பதாக  கபூர் குடும்ப வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்து இருப்பதாக  ஊடகங்கள் கூறியுள்ளன.

இந்த மௌனத்திற்குப் பின்னணியில் சென்னையிலுள்ள ஶ்ரீதேவிக்குச் சொந்தமான  பல கோடி ரூபாய் மதிப்புள்ள பங்களா, ஶ்ரீலதா மற்றும் அவருடைய கணவர் சதீஷ் ஆகியோரின் பெயருக்கு மாற்றப்படுவதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருவதாக அந்தத் தகவல்கள் குறிப்பிடு கின்றன.

BLOG COMMENTS POWERED BY DISQUS