தேனி  பயங்கரக் காட்டுத் தீ: கல்லூரி மாணவிகள் உள்பட 8 பேர் பலி!

தமிழகம்
Typography

தேனி, மார்ச் 12- தமிழகத்தின் தேனி பகுதியிலுள்ள குரங்கனி மலைப் பகுதியில்,  காடுகளை ஊடுருவிச் செல்லும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த கல்லூரி மாணவிகள் உள்பட பலர்  காட்டுத் தீயில் சிக்கியதில் 8 பேர் உயிரிழந்தனர். மாணவிகளின் இந்த உயிரிழப்புத் துயரத்தில் தமிழக மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த மாணவிகளின் குழுவில் பயிற்சிக்கு துணையாக சில பயிற்சியாளர்களும் சென்றிருந்தனர். மேலும் இந்தக் காட்டுத் தீயில் பொதுமக்களில் சிலரும் சிக்கிக் கொள்ள நேர்ந்ததாக மீட்புப்படையினர் கூறினர். 

இந்தக் கல்லூரி  மாணவிகளின் அணியில் கோவை, ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவிகள் மொத்தம் 37 பேர் இடம்பெற்றிருந்ததாக தெரிகிறது.

அவசரகால நடவடிக்கை அடிப்படையில் மீட்கப்பட்ட  27 பேரில் பலர் தீக் காயங்களுக்கு இலக்காயினர்.  இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர் என மீட்பு பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மீட்புப் பணியில் ஈடுபட்ட இராணுவ வீரர்களின் அணியைச் சேர்ந்த பாக்கியராஜ் கூறுகையில் இந்தக் காட்டு தீயிக்கு 5 ஆண்கள் 3 பெண்கள் பலியாகி உள்ளனர் என்று தொடக்கத் த்கவல்களில் தெரிய வந்திருப்பதாக கூறினார்.

இந்த மாணவிகளை மீட்கும்பணியில் ஹெலிகாப்டர் உதவியுடன் இராணுவம் ஈடுபடுத்தப்பட்டது. இந்த மீட்புப் பணி போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராம்  கூறினார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS