லண்டன் மெழுகு பொம்மை காட்சியகத்தில்  'பாகுபலி'  கட்டப்பா! 

தமிழகம்
Typography

லண்டன், மார்ச். 11- 'பாகுபலி' புகழ் கட்டப்பா சத்யராஜுக்கு லண்டன் மெழுகு அருங்காட்சியகத்தில் மெழுகு பொம்மை ஒன்று வைக்கப்பட வுள்ளது. இந்த கௌரவத்தை பெறும் முதல் தமிழ் நடிகர் சத்யராஜ் ஆவார்.

தமிழ்த் திரையுலகைப் பொறுத்தவரை, எதிர்காலத்தில் வெளியாகவிருக்கும் இதுபோன்ற கதை அம்சம் கொண்ட படங்களுக்கு சவால் விடும் அளவிற்கு எஸ்.எஸ் ராஜமெளளியின் இயக்கத்தில் 2015 மற்றும் 2017-இல் வெளியான இந்த 'பாகுபலி' திரைப்படம் அமைந்திருந்தது. 

கதை, திரைக்கதை, வசனம், கதாபாத்திரம் என ஒரு திரைப் படத்திற்கான அனைத்து அம்சங்களும் மிகச் சிறப்பாக அமைந்திருந்த இந்தப் படத்தில். இத்திரைப்படத்தின் கதாபாத்திரங்கள் அனைவரும் சிறப்பாக நடித்திருந்தனர்.

அதில் குறிப்பாக பாகுபலி, தேவசேனா, பல்வார்தேவன், கட்டப்பா, சிவகாமி, பிங்கலதேவன் ஆகிய கதாபாத்திரங்கள் அனைவராலும் புகழ்ந்து பேசப்பட்டது. 

இதன் முதல் பகுதி படத்தின் இறுதியில், பாகுபலியை கட்டப்பா ஏன் கொல்லனும் என்ற கேள்விக்கு அதன் இயக்குனர் எஸ்.எஸ் ராஜமெளளி- 2 வருடத்திற்கு பிறகு பதில் அளித்திருந்தார். 

அந்த வகையில், 'கட்டப்பா' கதாபாத்திரத்தில் நடித்த  சத்யராஜுக்கு லண்டன் மெழுகு அருங்காட்சியகத்தில் மெழுகு பொம்மை ஒன்று வைக்கப்படவுள்ளது, 

தமிழ் திரைப்பட நடிகர்களுக்கு கிடைத்த மாபெரும் சிறப்பாகும். சத்யராஜுக்கு கிடைத்த இந்த கெளரத்தை பாராட்டி இந்திய திரைப்பட பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துகளையும் சந்தோஷத்தையும் சமூக ஊடகங்கள் வழி தெரிவித்துள்ளனர். 

1978-இல் சட்டம் என் கையில் என்ற திரைப்படத்தில் வில்லன் பாத்திரத்தில் அறிமுகமான சத்யராஜ், அதன் பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சத்யராஜ் ஹீரோவாக நடித்த 'வேதம் புதிது', 'நடிகன்', 'அமைதிப்படை' மற்றும் தமிழ்நாடு அரசாங்கம் உதவியுடன்தயாரிக்கப்பட்ட  படமான 'பெரியார்' படங்கள்  ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற படங்களாகும்.  

 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS