ரிஷிகேஷில் ரஜினிகாந்த் வழிபாடு; அரசியல் ஆசி பெற வேண்டுதல்?

தமிழகம்
Typography

சென்னை, மார்ச் 14- அரசியலில் குதித்துள்ள நடிகர் ரஜினிகாந்த் உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் சுவாமி வழிபாடு செய்தார். நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு 15 நாள் ஆன்மிக பயணம் மேற்கொண்டுள்ளார்.

முன்னதாக காஷ்மீரில் உள்ள ரியாசி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற சிவ்கோரி என்ற குகைக் கோவிலுக்கு சென்று அவர் வழிபட்டார். பின்னர் இன்று உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள சுவாமி தயானந்த ஆசிரமத்திற்கு சென்று ரஜினிகாந்த் வழிபாடு செய்தார்.

ஆசிரமம் சார்பில் அவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சுவாமி தயானந்த சரஸ்வதியை குருவாக ஏற்று, அவரிடம் உபதேசம் பெற்றவர் ரஜினிகாந்த். தயானந்த சரஸ்வதி உயிருடன் இருந்த வரை கோவையில் உள்ள அவரது ஆஸ்ரமத்துக்கு அடிக்கடி ரஜினிகாந்த் சென்று வந்தார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS