பாலியல் தொல்லை கொடுத்த தோழியின் அப்பா! - 'தெய்வமகள்' நடிகை சத்யா

தமிழகம்
Typography

சென்னை, மார்ச் 21- சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'தெய்வமகள்' நாடகத் தொடரில்  'சத்யா' என்ற கதாபாத்திரத்தில்  நடிப்பதன் மூலம் பிரபலமடைந்த நடிகை வாணி போஜன். தனது தோழியின் அப்பா கொடுத்த பாலியல் தொல்லை குறித்து பகிரங்கமாகப் பேசியுள்ளார். 

அண்மையில் நடந்த ஒரு கருத்துப் பரிமாற்ற நிகழ்ச்சியில் பல துறைச் சார்ந்த பெண்கள் பங்கேற்றார்கள். இதில் பாலியல் தொல்லைகள் பற்றி விவாதிக்கப்பட்டன. 

இந்த நிகழ்வில் பேசிய வாணி போஜன் (சத்யா), தனக்கு சிறுவயதில் நடந்த பாலியல் தொந்தரவு சம்பவத்தைப் பற்றி வெளிப்படையாகவே சொல்லிவிட்டார். 

திரையுலகிற்கு வரும் ஹீரோயின்களில் பலரும் பாலியல் தொல்லைக்கு ஆளாகி இருக்கின்றனர். சமீபமாக, பல நடிகைகளும் தாங்கள் துறையில் அனுபவித்த கஷ்டங்களை ஊடகங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர். தொலைக்காட்சி நடிகை  நடிகை வாணி போஜனும் இதுபற்றி வாய் திறந்துள்ளார்.

 4-ஆம் வகுப்பு படிக்கும்போது வாணி போஜன் அவரது தோழியின் வீட்டிற்கு சென்றாராம். அங்கு தோழியின் தந்தை, உன்னுடைய தோழி மேலே மாடியில் தான் இருக்கிறார் என்று கூறியுள்ளார். சத்யாவும், அதனை நம்பி மாடிக்குப் போக, பின்னாலேயே வந்த அவர் கதவை பூட்டியுள்ளார்.

பின்பு, அவருக்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுத்துள்ளார். இதனால் தனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. தோழியிடமும் இதனை தெரிவிக்கவில்லை. ஒருவேளை அவர் தோழியிடம் சொல்லியிருந்தால், அவள் என்ன செய்திருப்பாள் என்றும் தெரியவில்லை" என்று கூறியுள்ளார் சத்யா.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS