படுக்கை விவகாரம்: நடிகைகளின் பட்டியல்! ஒரே டிவிட்டில் நொறுக்கி எடுத்தார் நேஹா

தமிழகம்
Typography

சென்னை மார்ச்.22- சினிமா துறையில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை அதிகம் இருப்பதாக சில பிரபல நடிகைகள் குற்றம்சாட்டிவரும் வேளையில், பிரபல தயாரிப்பாளரான கே.இ. ஞானவேல்ராஜாவின் மனைவி நேஹா ஒரு 'பகீர்' தகவலை வெளியிட்டுள்ளார். 

"சில நடிகைகள் பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து கொள்ளவும் தயாராக உள்ளனர். திருமணமான ஆண்கள் தான் அவர்களின் குறி. அதனால் பல குடும்பம் உடைகின்றன. 

அவர்கள் பாலியல் தொழில் செய்பவர்களை விட மோசமானவர்கள். அவர்கள் பட்டியலை விரைவில் வெளியிட்டு சினிமா துறையில் இருந்து வெளியேற்றுவேன்" என முதலில் நேஹா டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். 

"உங்கள் கணவருக்கு தான் அப்படி நடந்ததா?" என  வலைத்தள வாசிகள் பலரும்  கேள்விக் கணைகளைத் தொடுத்ததால் கொஞ்ச நேரம் கழித்து அதை நீக்கிவிட்டார். 

மீண்டும் 'சுசிலீக்ஸ்' போன்ற புதிய லீக்ஸ் வரப்போகிறது என பலரும் சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்ய ஆரம்பித்ததால், இந்த சர்ச்சை பற்றி நேஹா ஞானவேல்ராஜா மற்றொரு டிவீட்டில் விளக்கம் அளித்துள்ளார்.

"எனக்கும் என கணவருக்கும் எந்த பிரச்னையும் இல்லை. இவ்வளவு 'சென்சிடிவ்'வான ஒரு விஷயத்தை நான் பொழுது போக்குக்காக செய்யவில்லை" என கூறியுள்ளார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS