சாலை தடுப்பில் லோரி மோதல்: இந்தியாவில் 17 பேர் பலி!

தமிழகம்
Typography

புனே, ஏப் 10-  கட்டுபாட்டை இழந்த 'டிரக்' லோரி ஒன்று சாலை தடுப்பில்,  மோதியதில் அதில் பயணம் செய்த 17 பேர் பலியாகி உள்ளனர். 15 பேர் காயமடைந்தனர்.

மகாராஷ்டிரா-புனே சதாரா தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது பிரக் கந்தலா என்ற இடத்தில்  லோரி கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதியது. 

இதில் பயணம் செய்த 17 பேர் உயிரிழந்தனர். 15 பேர் காயமடைந்து மருத்தவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவலறிந்த மீட்பு படையினர் சம்பவ நடந்த இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியின் ஈடுபட்டனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS