இந்தியாவுக்கு பெருமை சேர்த்த நடிகர் மாதவன் மகன்

தமிழகம்
Typography

பேங்காக், ஏப் 9- தாய்லாந்தில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் நடிகர் மாதவனின் மகன் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார்.

தாய்லாந்தில் குரூப்-1 (12  மற்றும் 13 வயது) குரூப்- 2 (14 மற்றும் 15வயது) , குரூப்- 3 (16-  வயது 18) என மூன்று பிரிவுகளாக நீச்சல் போட்டிக்கான சாம்பின்ஷிப் போட்டி கடந்த 7 ஆம் தேதி நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில் ஆண்களுக்கான 1,500 மீட்டர் பிரி ஸ்டைல் போட்டியில் நடிகர் மாதவனின் மகன் கலந்து கொண்டார். இதில் அவர் வெண்கலப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இது குறித்து மாதவன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில்   தனது மகன் வேடான்  தாய்லாந்தித்தில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை பெற்றுத் தந்தார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

 ''இதை நான் பெருமையாக கருதுகிறேன் இது போல வேடான் பல வெற்றிகளை பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என அவனுக்கு வாழ்த்து கூறிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி'' என்று அவர் தெரிவித்துக் கொண்டார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS