போர்க் களமானது சென்னை!  சீமான் - பாரதிராஜா கைது

தமிழகம்
Typography

சென்னை, ஏப்.11-காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மற்றும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்து வேளையில்,  சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவிருக்கும் ஐபிஎல் போட்டியை நடத்துவதற்கு அனுமதி வழங்கக்கூடாது என அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகள் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

அண்ணாசாலை முழுவதும் தமிழ்க்கொடிகளைக் கையில் ஏந்தி கொண்டு "எங்கள் நாடு -தமிழ்நாடு விடமாட்டோம்"   எனவும் "தமிழன்டா" எனக் கோஷங்களை எழுப்பிவாறு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது போலிசார் தடியடி நடத்தினர். இந்நிலையில் சீமான் மற்றும் பாரதிராஜா ஆகியோர் கைது செய்யப் பட்டுள்ளனர். கிரிக்கெட் வீரர்கள் ஐபிஎல் மைதானத்திற்குள் நுழைந்து விட்ட நிலையில் ரசிகர்களுக்கு பலத்த சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப் படுகின்றனர்.

இதற்கிடையில் போராட்டத்தில்  ஈடுபட்ட சீமானின்  'நாம் தமிழர்' கட்சியினர், டோனி ரசிகனான சரவணன் என்பரை தாக்கியதாக அவர் புகார் அளித்துள்ளார். இந்தப் போராட்டத்தினை பயன்படுத்தி கள்ள டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக எழுந்த புகாரில் நபர் ஒருவரை போலீசார் கைது செய்tதனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS