நடிகர் ராணாவின் தம்பி லீலைகள்; அம்பலப்படுத்திய நடிகை ஸ்ரீரெட்டி

தமிழகம்
Typography

ஐதராபாத், ஏப். 11- பிரபல தயாரிப்பாளரின் மகன்  தன்னை கட்டாயப்படுத்தி உறவு வைத்தார்.  அந்தப் புகைப்படங்களை வெளியிடுவேன்  என தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி  அறிவித்தார். அறிவித்ததோடு மட்டுமல்லாமல்,  ஒரு நடிகரின் சகோதரர் தன்னுடன் வைத்திருந்த உறவை அம்பலப்படுத்தும் வகையில் படத்தையும் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்புக்காக உல்லாசத்திற்கு  அழைக்கும் பழக்கம் தற்போது தான் அதிகமாக உள்ளது என்று அண்மையில் நடிகை ஸ்ரீரெட்டி அம்பலப்படுத்தி இருந்தார்.

தனக்கு நடிகர்கள் சங்க  உறுப்பினருக்கான அடையாள அட்டை வழங்கவில்லை என்று கூறி நடுரோட்டில் அவர் அரை நிர்வாணப் போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டுடியோவுக்கு அழைத்துச் சென்ற பிரபல தயாரிப்பாளர் ஒருவரின் மகன் என்னை கட்டாயப்படுத்தி உறவு வைத்துக் கொண்டார். தெலுங்கு திரையுலகை ஆளும் தயாரிப்பாளர் அவர் என்று ஸ்ரீரெட்டி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். 

என்னை பலவந்தப்படுத்திய அந்த தயாரிப்பாளரின் மகன்   பெயரை விரைவில் வெளியிடுவேன் என்கிறார் ஸ்ரீரெட்டி.

என்னை ஸ்டுடியோவுக்கு அழைத்துச் சென்ற தயாரிப்பாளரின் மகனின் புகைப்படத்தை விரைவில் வெளியிடுவேன்.  அதுதான் என் பிரம்மாஸ்திரம் என்று அவர் தெரிவித்துள்ளார்.  

இந்நிலையில் நடிகர் ராணாவின் தம்பி அரசுக்கு சொந்தமான ஸ்டுடியோவில் தன்னுடன் உறவு வைத்துக் கொண்டதாக, நெருக்ககமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இப்போது ஶ்ரீரெட்டி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார். 

அடுத்து தன் வாழ்க்கையில் விளையாடி பிரபல எழுத்தாளர் ஒருவர் பற்றிய அந்தரங்கங்களை தாம் வெளியிடப் போவதாக அவர் கூறியுள்ளார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS